வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (02/12/2017)

தங்க மங்கைகளுக்கு மாட்டை பரிசளிக்கும் ஹரியானா அரசு!

உலக இளையோர் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ஒரு மாடு பரிசாக வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. 

மாடு பரிசு

 

உலக இளையோர் மகளிர் குத்துச்சண்டை போட்டி அஸாம் தலைநகர் கௌகாத்தியில் நவம்பர் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். 

நீத்து, சாக்ஷி, ஜோதி, ஷாஷி ஆகியோருக்கு தங்கம் கிடைத்தது. அனுபமா, நேகா ஆகியோர் வெண்கலம் வென்றனர். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அங்குஷிதா போரா தங்கம் வென்றார். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இந்நிலையில், பதக்கம் வென்ற 6 வீராங்கனைகளுக்கும் ஆளுக்கு தலா ஒரு இந்திய இனத்தைச் சேர்ந்த பசுமாடு வழங்கப்படும் என்று ஹரியானா மாநில விவசாயத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தங்கர் தெரிவித்தார். இந்த மாடுகளின் மூலம் கிடைக்கும் பால், வீராங்கனைகள் இன்னும் வலிமையாகவும், சிறப்பாகவும் விளையாட உதவும் என்றும் தங்கர் கூறினார்.