தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை!

லாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது.

தலாக் செய்தால் சிறைத்தண்டனை

இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவையிலும் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அவையிலுமே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதால், சட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்காது என்று மத்திய அரசு நம்புகிறது. 

புதிய சட்டத்தின்படி வாயால், எழுத்துபூர்வமாக, வாட்ஸ்அப், கடிதம் என எந்த வழியாக தலாக் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. ஆகஸ்ட் 22-ம் தேதி, உச்ச நீதிமன்றதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 'முத்தலாக் முறை  சட்ட விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னரும் முஸ்லிம் பெண்கள் தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து, சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய திருமணச்சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியை மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்ய அனுமதிக்கிறது. 1,400 ஆண்டுகளாக இஸ்லாமில் தலாக் நடைமுறையில் உள்ளது. குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி நிறைவடைகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!