இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது!

புதுடெல்லி:இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்  துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 3 புள்ளிகள் குறைந்திருப்பதாக மத்திய சுகாதார  அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பிறந்த குழந்தைகளில் 1000 -க்கு 47 குழந்தைள் இறந்ததாகவும், இவ்வருடம் இது 44 ஆகக் குறைந்திருப்பதாகவும்  அந்த அமைச்சகம் கூறியுள்ளது. மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய  அறிக்கயில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி, கிராமப்பகுதியில் குழந்தைகள் இறப்பு விகிதம் 51-லிருந்து 48 ஆகக்  குறைந்துள்ளது. இதேபோல், நகரங்களில் இவ்விகிதம் 31-லிருந்து 29 ஆகக்  குறைந்துள்ளது. மாநிலங்களில் கோவா மற்றும் மணிப்பூரில் குழந்தைகள் இறப்பு விகிதம்  மிகவும் குறைந்து 11 ஆகக் காணப்படுகிறது. இம்மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கேரளா  (12) உள்ளது. அதிகபட்சமாக மத்தியபிரதேச மாநிலத்தில் 59 புள்ளிகளாக இருக்கிறது.  அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு  விகிதம் 57 ஆகக் காணப்படுகிறது.
 
தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால்  தொடர்ந்து எடுக்கப்பட்ட குழந்தைகள் பிறப்பு மற்றும் இறப்பு கணக்கெடுப்புகளை  அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!