வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (03/12/2017)

கடைசி தொடர்பு:14:08 (03/12/2017)

”ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”: பினராயி விஜயன் வலியுறுத்தல்

”ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

பினராயி விஜயன்

ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஒகி புயல் கேரளா நோக்கி நகர்ந்ததால், புயலால் கேரளா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.

இந்நிலையில், ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசை வலிறுத்தியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். அந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடி பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. மக்களின் சொத்துக்கள் அழிந்ததோடு பொருளாதாரப் பேரழிவும் ஏற்பட்டுள்ளதால் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.