டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்: புதிய சாதனை நிகழ்த்திய கோலி

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

kohli

இந்தியா- இலங்கை மோதும் மூன்றாவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா- இலங்கை மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கைநழுவிப்போனது. கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைவில் இருக்கிறது இலங்கை அணி. இரண்டாவது போட்டியில் வெற்றி; மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் மிகுந்த விறுவிருப்புடன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில்  விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!