வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/12/2017)

கடைசி தொடர்பு:12:22 (04/12/2017)

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல்..!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்செய்தார். 


காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை டிசம்பர் 16-ம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. நேற்றுவரை யாரும் வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை. இன்று காலையில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்செய்தார்.

அவரது வேட்புமனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனியும் முன்மொழிந்தனர். நாளை வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து மூன்று மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், ராகுல் காந்தி கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார்.