இரண்டு மாநிலங்களவை எம்.பி-க்கள் தகுதிநீக்கம்: வெங்கைய நாயுடு அதிரடி

ராஜ்யசபா உறுப்பினர்களான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதிநீக்கம் செய்வதாக, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெங்கய்யா நாயுடு

ராஜ்யசபா எம்.பி பதவியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகிய இருவர் மீதும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லோக்சபா தலைவர் ஆர்.சி.பி.சிங், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவிடம் புகார் அளித்தார். மேலும் புகாரளிக்கப்பட்ட இருவரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10-ன் கீழ், சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதிநீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உத்தரவிட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மாநிலங்களவைச் செயலர் நேற்று வெளியிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!