Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை! - மத்தியப்பிரதேசத்தில் மசோதா நிறைவேற்றம்

த்தியப் பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

பாலியல் பலாத்காரத்துக்குத் தூக்குத்தண்டனை

மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில், இதற்கான மசோதாவை முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான் கொண்டுவந்தார். இந்த சட்டத்தின்படி. குறைந்தபட்சத் தண்டனையே வாழ்நாள் முழுவதும் சிறைதான்.  பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டால் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பெண்ணுடன் பாலுறவு கொண்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நிச்சயம்.

புதிய சட்டம்குறித்து மத்தியப்பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான் கூறுகையில், ''மனிதர்கள் விலங்குகளைவிட மோசமாக நடந்து கொள்கிறார்கள். இணையதளங்களும் அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. நமது சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியாவிலேயே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் தூக்குத்தண்டனை அளிக்கும் முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம்தான். புதிய சட்டத்திருத்தம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement