வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது ’ஆகாஷ்’ ஏவுகணை

இந்தியாவின் ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஆகாஷ் ஏவுகணை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. தரையிலிருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல ஆகாஷ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணைச் சோதனை, ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து செலுத்தப்பட்டது. ஆகாஷ் ஏவுகணையும் குட்டி விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியது. இந்தச் சோதனையை ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி நேரில் பார்த்து இத்திட்டத்தின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். 

இந்த ஏவுகணையின்மூலம்  55 கி எடைகொண்ட ஆயுதங்களைப் பொருத்தி அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று, வானில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் நிறைந்தது ஆகாஷ் ஏவுகணை. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!