வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (06/12/2017)

கடைசி தொடர்பு:08:20 (06/12/2017)

விஜய் மல்லையா மீதான வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமோசடிப் புகாரில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், நாளை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

விஜய் மல்லையா

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு அரசியல் கால்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது என வாதாடினார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.