ஓகி புயலில் முதியவரைத் தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸுக்கு குவியும் பாராட்டு!

கேரளாவை ஓகி புயல் கடுமையாகத் தாக்கியது. கொச்சி அருகேயுள்ள கண்ணமாலி என்ற பகுதியில், போலீஸ் ஏட்டு ஆன்ட்ரூஸ் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு பகுதியில் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருக்க, 75 வயது முதியவரான ஆன்டனி என்பவர், வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். முதியவர் அபயக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்கு சென்ற  ஆன்ட்ரூஸ், அவரை தோளில் சுமந்துசென்று காப்பாற்றினார். 

ஓகி புயலில் முதியவரை மீட்ட போலீஸ்

முதியவரை மீட்க ஆன்ட்ரூஸ் எடுத்த முயற்சியை வீடியோவாக எடுத்த ஒருவர், அதை சமூகவலைதளங்களில் பதிவிட, வைரலானது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட ஆன்ட்ரூஸுக்கு பாராட்டுகள் குவிந்தது.  ஆன்ட்ரூஸை பலரும் போனில் தொடர்பு கொண்டு, அவரின் செயலை வெகுவாகப் பாராட்டினர். கொச்சி நகர போலீஸ் கமிஷனர் தினேஷ் அவருக்கு பரிசளித்தார்.  

ஓகி புயலில் முதியவரை காப்பாற்றியவருக்கு பாராட்டு

இதுகுறித்து ஆன்ட்ரூஸ் கூறுகையில், '' புயல் நேரத்தில் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை மீட்டதற்காக நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. அந்த வீடியோ வைரலானதையடுத்து ஏராளமானோர் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டுகின்றனர். அதையே, பெருமையாகக் கருதுகிறேன் '' என்றார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!