Published:Updated:

குழப்பமான கொரோனா முடிவுகள்; க்வாரன்டீனில் தவிக்கும் 11 வயது இங்கிலாந்து சிறுமி!

COVID-19 patient/ Representation Image
News
COVID-19 patient/ Representation Image ( AP Photo / Jae C. Hong )

டிசம்பர் 22-ம் தேதி டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது அந்தக் குடும்பம். விமான நிலையப் பரிசோதனையில் குடும்பத்தில் 11 வயது சிறுமிக்கு மட்டும் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இங்கிலாந்திலிருந்து கிளம்பும்போது செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவே வந்தது.

இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட இங்கிலாந்திலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு க்வாரன்டீன் செய்யப்பட்டுள்ளார். க்வாரன்டீன் எப்போது முடியும், சிறுமி எப்போது பெற்றோருடன் இணைய முடியும், எப்போது நாட்டிற்குத் திரும்ப முடியும் என்பது பற்றிய சரியான விதிமுறைகள் இல்லாததால், குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து தவித்து வருகின்றனர்.

 Covid
Covid
AP Photo / Channi Anand

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிசம்பர் 22-ம் தேதி டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது அந்தக் குடும்பம். விமான நிலையப் பரிசோதனையில் குடும்பத்தில் 11 வயது சிறுமிக்கு மட்டும் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இங்கிலாந்திலிருந்து கிளம்பும்போது செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவே வந்தது. டெல்லி விமான நிலையத்தைத் தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்பட்ட கோவிட் பரிசோதனை மையத்தில் மறுபரிசோதனை செய்வதற்காக சிறுமியும், அவரின் அப்பாவும் சென்றனர்.

டெல்லியில் தற்போது குளிர்காலம் என்பதாலும், மைதானத்தில் டென்ட்டில் மையம் இயங்கியதாலும் அங்கு கடும்குளிரில் இருவரும் அவதிப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு 6 மணி நேரம் அவர்கள் அங்கு காக்க வைக்கப்பட்டனர். அந்தப் பரிசோதனையிலும் சிறுமிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இந்நிலையில் சிறுமி எப்போது க்வாரன்டீன் முடிந்து அனுப்பப்படுவார் என்ற தெளிவான வரையறைகள் இல்லை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

``கோவிட்-19 பரிசோதனை, கொள்கைகள் உள்ளிட்ட எந்த நடைமுறையிலும் தெளிவு இல்லை. இங்கிருந்து எப்போது செல்ல முடியும் என்றும் தெரியவில்லை. சிலர், என் மகள் எந்த வேரியன்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் பொறுத்தே டிஸ்சார்ஜ் செய்வார்கள் என்கிறார்கள். சிலர், 14 நாள்கள் க்வாரன்டீன் காலம் முடியாமல் என் மகளை அனுப்பமாட்டார்கள் என்கிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக எந்தவித தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை" என்று தெரிவிக்கிறார் சிறுமியின் தந்தை ஆதர்ஷ் மிஸ்ரா.

Covid -19 Pandemic
Covid -19 Pandemic
Pixabay

இந்தக் குடும்பத்தினர் 10-12 நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். தற்போது எந்தத் தகவலும் கொடுக்கப்படாததால் விடுமுறை நாள்கள் அனைத்தும் மருத்துவமனையிலே கடந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ``எம் அம்மாவையும், சகோதரர்களையும் பார்க்க முடியாமல் சோகத்திலிருக்கிறேன். நான் எப்போது இங்கிருந்து செல்லலாம் என்று யாரும் இதுவரை தெரிவிக்கவில்லை. நான் எப்போது வீடு திரும்புவேன்?" எனப் பரிதாபமாகக் கேட்கிறார் அந்தச் சிறுமி.

டெல்லி அரசு விதிமுறைகளின்படி, கோவிட் தொற்று உறுதி செய்யப்படும் சர்வதேச பயணிகள், வீட்டிலோ, கோவிட் பராமரிப்பு மையங்களிலோ, சமுதாய மருத்துவ மையங்களிலோ, மருத்துவமனையிலோ 10 நாள்கள் க்வாரான்டீன் செய்யப்பட வேண்டும்.