வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (08/12/2017)

கடைசி தொடர்பு:13:17 (08/12/2017)

`வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை!’ - நீச்சலில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை காஞ்சன்மலா பாண்டே தங்கம் வென்றுள்ளார். 

Kanchanmala Pande
 

நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மலா பாண்டே ரிசர்வ் வங்கியில் பணிபுரிகிறார். 26 வயதான காஞ்சன்மலா பார்வை குறைபாடு உடையவர். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார். மெக்ஸிகோவில் நடைபெற்ற போட்டியில், எஸ் -11 பிரிவில் 200 மீட்டர் மெட்லே நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் காஞ்சன்மலா. உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் இவர்தான். 

காஞ்சன்மலாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழிசை ட்வீட் செய்துள்ளார்..

தங்கம் வென்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சன்மலா ‘உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்காகக் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டேன். தங்கம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க