`வாசினார்’ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா! | India became a part in Wassenaar Arrangement

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (08/12/2017)

கடைசி தொடர்பு:17:25 (08/12/2017)

`வாசினார்’ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா!

ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள நிபந்தனைகள் விதிக்க உருவாக்கப்பட்ட ‘வாசினார்’ கூட்டமைப்பில் புதிதாக இந்தியா இணைந்துள்ளது.

வாசினார்

ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை வல்லரசுகள் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதைத் தடுப்பதற்காகவும் அதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரவும் சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புதான் ‘வாசினார்’. இந்த ‘வாசினார்’ கூட்டமைப்பில் தற்போது 42 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அர்ஜெண்டினா உள்ளிட்ட 41 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்தக் கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்தியா இணைவதற்கான அனுமதியை இதர நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அனுமதி அளித்தன. என்.எஸ்.ஜி எனப்படும் அணு ஆயுத விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைய தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில் வாசினார் கூட்டமைப்பில் இந்தியா இணைய தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இது சீனாவுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும் இந்தியா விரைவில் என்.எஸ்.ஜி-யில் சேர இதன் மூலம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.