ரஷ்யா, சீன அமைச்சர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆலோசனை! | RIC foreign ministers meet today in New delhi!

வெளியிடப்பட்ட நேரம்: 06:12 (11/12/2017)

கடைசி தொடர்பு:07:59 (11/12/2017)

ரஷ்யா, சீன அமைச்சர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆலோசனை!

சுஷ்மா ஸ்வராஜ

யங்கரவாதம், பிரிவினைவாதம் போன்றப் பிரச்னைகளை முறியடிப்பது தொடர்பாக, இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

RIC எனப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அவ்வப்போது கூடி, இதுபோன்ற ஆலோசனையை நடத்திவருகிறார்கள்.

பிராந்திய அளவிலான பிரச்னைகள், உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்டவை இந்த ஆலோசனையின்போது முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-வுடன் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்று இருதரப்பு உறவுகள்குறித்து பேச்சு நடத்தவுள்ளார். டோக்லாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பதற்றம்குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவுடனும் சுஷ்மா ஆலோசனை நடத்தவிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் கூறுகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close