விசித்திரப் போட்டிவைத்து மக்களை அதிரவைத்த எம்.எல்.ஏ!

ஜார்கண்ட் மாநிலம் லித்திபரா என்னும் தொகுதியில் `முத்தப் போட்டி’யை நடத்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஜார்கண்ட் எம்.எல்.ஏ சைமன் மாராண்டி.

ஜார்கண்ட்
 

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன் மாராண்டி ஜார்கண்ட் மாநிலத்தில் லித்திபரா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் அத்தொகுதியில் உள்ள  பழங்குடியின மக்களுக்கு `முத்தத் திருவிழா’ என்னும் விசித்திரப் போட்டி ஒன்றை நடத்தியுள்ளார். இப்போட்டியில் சுமார் 100 பழங்குடியினத் தம்பதிகள் பங்குபெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற மூன்று தம்பதிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முத்தப் போட்டி குறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ சைமன், ‘பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு தயக்கம் நிலவுகிறது. அவர்களில் பலர் கூச்ச சுபாவமுடன் இருக்கிறார்கள். அவர்களின் அன்பையும் நவீனத்துவத்தையும் உண்டாக்கவே இந்த முயற்சி’ என்று பேசியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ சைமன் நடத்திய இந்த விசித்திரப் போட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ’பழங்குடியினரின் கூச்ச சுபாவத்தை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான போட்டிகள் நடத்தலாம். அதைவிட்டு விட்டு இப்படியொரு அர்த்தமற்ற போட்டியை நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!