தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு மது கொடுத்த ஆசிரியர்கள்!

கர்நாடகாவின் துமக்குரு (Tumakuru) மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு  மதுபாட்டில்களைக் கொடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துமுக்குரு மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், பெண் ஆசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்களும்  கடந்த 10-ம் தேதியன்று தக்ஷின கன்னடாவுக்கு (Dakshina kannada) கல்விச் சுற்றுலா சென்றுள்ளார்கள். இந்நிலையில், அவர்கள் துமுக்குருவிற்கு திரும்பி வரும்போது, இரண்டு மாணவர்கள் ஆசிரியரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்கள். மதுபோதையில் இருந்த  ஆசிரியர்கள்,  ஆல்கஹால் கலந்து வைத்திருந்த பாட்டிலை மாணவர்களிடம் கொடுத்துள்ளார்கள்.

மது


அதைக் குடித்த ஏழு மாணவர்கள், நிலைதடுமாறி வாந்தி எடுத்துள்ளார்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரின்மீதும் புகார் கொடுத்துள்ளனர். இதை விசாரித்த, பப்ளிக்  இன்ஸ்ட்ரக்‌ஷன் துறையின்  துணை இயக்குநர், அந்தப் பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு, தலைமை ஆசிரியரையும் மதுவை அருந்தக் கொடுத்த ஆசிரியர்களையும் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!