ஒரு குழந்தையைக் கொன்ற தஷ்வந்த்துக்கு பெயில் கொடுக்கும் நிலைதான் இருக்கிறதா? | Child activist Devaneyan talks about the reasons for increasing number of juvenile behave against law and harassment on children

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (14/12/2017)

கடைசி தொடர்பு:14:22 (14/12/2017)

ஒரு குழந்தையைக் கொன்ற தஷ்வந்த்துக்கு பெயில் கொடுக்கும் நிலைதான் இருக்கிறதா?

மீபத்தில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் சில அதிர்ச்சியளிக்கும் தகவல்களை அளிக்கின்றன.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் 13.6% அதிகரித்திருக்கின்றன. அதாவது, அதற்கு முந்தைய வருடத்தோடு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றன. மேலும், 18 வயதுக்குக் குறைவானவர்கள், சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவது 7.2%  அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை

ராஜஸ்தான், மஹாராஸ்ட்ரா, மத்தியப்பிரதேசம், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில்தான் குழந்தைகள் சட்டத்துக்கு முரணான செயல்பாட்டில் ஈடுபடுவதாகக் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் சொல்கின்றன. மேலும், ஆள் கடத்தல், தாக்குதல், கொலை அல்லது கொலை முயற்சி, பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளே அதில் பிரதானம்.

 குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பான ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயனிடம் இதற்கான காரணங்கள் குறித்து கேட்டோம்.

எல்லா குற்றங்களுமே அதிகரித்திருக்கின்றன

``முதலில் நாம் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் 2016-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தில், குழந்தைகள் என்றில்லை எல்லா வகையான குற்றங்களுமே அதிகரித்திருக்கின்றன என்பதையே காட்டுகிறது.

வழக்குகள் முடிக்கப்பட்டது குறித்து க்ளியரான டேட்டா இல்லைகுழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து தேவநேயன்

இந்த முறை அதிகப்படியான கேட்டகரிகளை இணைத்திருக்கிறார்கள். இதன் மூலம் எந்தப் பிரச்னையின் கீழ் வழக்குகள் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன என்பதைத்  தெரிந்துகொள்ள முடிகிறது. இதில் பாசிட்டிவான விஷயம், வழக்குகளைப் பதிவு செய்ய நிறைய பேர் முன் வந்திருக்கிறார்கள் என்பதுதான். ஆனால், இதில் உள்ள குற்றங்களில் எத்தனை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தான க்ளியரான டேட்டா இல்லை. போஸ்கோ எனக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலும், இரண்டு மூன்று ஆண்டுகள் வழக்குகள் தேங்கித்தான் கிடக்கின்றன.

சூழ்நிலைகள்தான் முடிவு செய்கின்றன

அடுத்ததாக, குழந்தைகள் குற்றவாளிகள் அல்ல. குழந்தைகள் குற்றம் செய்ய மாட்டார்கள்.அவர்களுடைய சூழ்நிலைதான் குற்றங்களைச் செய்கின்றன. குழந்தைகளுக்கு தனக்குத்தானே முடிவெடுக்கும் பக்குவம் கிடையாது. அதே போலவே, குழந்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு செய்கிற குற்றங்கள் என்று தனியாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பொதுத்தளத்தில் குழந்தை வன்முறையாளர்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம், இடை விலகல். நிருபயா கேசில் இருந்து பார்த்தால், எல்லா வழக்குகளிலுமே தொடர்புடைய ஜுவனைல்கள் பள்ளிகளில் இருந்து இடைநின்றவர்களாக இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின்மீது வன்முறை

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற சென்னை மாநகரத்தில் நடைபெற்ற காவல்துறை பிரச்னையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாக்கப்பட்டார்கள். அது குறித்த வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கேஸ்கள் சென்னை மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்டி கேஸ் எனக்கூடிய கேஸ்கள். குழந்தைகள் எளிதில் தீங்குக்கு ஆளாபவர்களாகவும் தீங்கைச் செய்ய மாற்றப்படுபவர்களாகவும் மாறிவிடுகிரார்கள். போக்ஸோவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பெயில் கிடைப்பது கடினம் என்பார்கள். ஆனால், தஷ்வந்த்துக்கு கொடுத்தார்கள். ஒரு குழந்தையை எரிச்சு கொன்றவரை சுப்ரீம் கோர்ட் வக்கீலை வைத்து கேஸை எளிதாக உடைக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். அவர் அவரின் அம்மாவைக் கொலை செய்கிறார். ஆனால், குழந்தைகள் வேறு வகை.

நாம் என்ன செய்தோம், அரசு என்ன செய்தது?

குழந்தைகள் சட்டத்துக்கு முரணாகச் செயல்படுபவர்கள்தான். குற்றவாளிகள் அல்ல. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. அவர்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். ஆனால், அவர்களைச் சரியான முறையில் வளர்க்க வீட்டிலும் சரி சமூகத்திலும் சரி... என்ன மாரல் இருக்கிறது என்பதுதான் கேள்வி. நாம் என்ன செய்தோம். சில வருடங்களுக்கு முன்பு, சில வளர் இளம் பருவத்தைச் சேர்ந்தவர்களைச் சட்டையைக் கழட்டி அமர வைத்திருந்தார்கள். என்ன என்று கேட்டதற்கு, எப்படி எப்படி நீ சமஞ்சது எப்படி என்ற பாடலை பாடினார்கள் என்ற காரணம் சொன்னார்கள். ஆனால், அந்தப் பாடலை எழுதியவரைத் தானே தண்டிக்க வேண்டும். 16-18 ஒரு கன்ஃபியூஸ்டான ஸ்டேட். வளர் இளம் பருத்தினர். அவர்களுக்குத் தேவையானவற்றை நாம் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டுமே தவிர, குழந்தைகளுக்கான வயதை 16-க்கு குறைக்க கூடாது. செருப்பு பத்தவில்லை என்றால் அதை மாற்ற வேண்டுமே தவிர, காலை வெட்டக் கூடாது. நீண்ட கால அடிப்படையில், இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். இன்றைக்கே நீங்களும் நாங்களும்தான் இந்தப் பிரச்னையைப் பற்றி அலசி ஆராய்கிறோம். அரசு ஏதாவது செய்ததா. கல்வித்துறையில் ஏன் இது போன்று நடைபெறுகிறது என்ற ஆய்வுகள் ஏதும் நடைபெற்றனவா?” என்கிறார் தேவநேயன்.


டிரெண்டிங் @ விகடன்