வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/12/2017)

கடைசி தொடர்பு:14:10 (14/12/2017)

ராணுவ வீரர்கள் என்றால் சும்மாவா! - சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை போட்ட திடீர் உத்தரவு

'சுங்கச் சாவடிகளைக் கடக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும்' என்று சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராணுவ வீரர்கள்
 

பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ராணுவ வீரர்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, அவர்களின் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுவிடலாம். அவ்வாறு கடந்து செல்லும் ராணுவ வீரர்களுக்கு, சுங்கச்சாவடி ஊழியர்கள் சல்யூட் வைக்க வேண்டும் என்று தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘நாட்டைப் பாதுக்காக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கு, முறையான மரியாதை அளிக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சுங்கச்சாவடிகளைக் கடந்துசெல்லும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும், அவர்களின் அடையாள அட்டையை மூத்த ஊழியர்தான் பரிசோதிக்க வேண்டும்’ இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளில், ராணுவ வீரர்கள் கடந்து செல்லும்போது சல்யூட் அடித்துக்கொண்டிருந்தோமானால் வேலை பாதிக்கப்படாதா என்று கேள்வியெழுப்பிவருகின்றனர், சுங்கச்சாவடி ஊழியர்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க