'குஜராத், இமாசலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் ?' - கருத்துக்கணிப்பு தகவல் | Post poll survey reveals that BJP will win both Gujarat and Himachal pradesh!

வெளியிடப்பட்ட நேரம்: 02:02 (15/12/2017)

கடைசி தொடர்பு:07:51 (15/12/2017)

'குஜராத், இமாசலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் ?' - கருத்துக்கணிப்பு தகவல்

மோடி - ராகுல் காந்தி

குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாசலில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. குஜராத்தில் பா.ஜ.கவே ஆட்சியில் இருந்துவருகிறது. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றிபெற்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இமாசலப் பிரதேசத்தில் பா.ஜ.க, ஆட்சியைக் கைப்பற்றும். குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதேபோல், 68 தொகுதிகளைக்கொண்ட இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இந்த இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் அடிப்படையில், குஜராத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து பி.ஜே.பி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரை 99 -113 இடங்கள் வரை பி.ஜே.பி வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 68 முதல் 82 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதரக் கட்சிகள் நான்கு இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேச தேர்தலில் 68 இடங்களில் 47 முதல் 55 இடங்கள் வரை பா.ஜ.க வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 13 முதல் 20 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க