செல்போன், தொலைக்காட்சி பெட்டிகளுக்கான சுங்கவரி திடீர் உயர்வு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கீபேட் செல்போன்களின் சுங்கவரி (customs duty) 15 சதவிகிம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம்  இன்று வெளியிட்டுள்ளது. 

mobile phone custom duty
 

அதேபோல், கலர் டிவி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த வரி உயர்வு என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும், கணினி திரை, புரஜெக்டர்கள் உள்ளிட்டவைகளுக்கான சுங்கவரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி இதன்மூலம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!