வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (15/12/2017)

கடைசி தொடர்பு:18:40 (15/12/2017)

கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது!

கார் மோதி மூதாட்டி இறந்த வழக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது செய்யப்பட்டார். 

ரஹானே


ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே (54). இவர் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். மஹாராஷ்ட்ர மாநிலம் கோல்கபூர் காகல் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற ஆஷாதய் காம்ப்ளி (67) என்ற  மூதாட்டி மீது கார் மீது விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அந்த வயதானப் பெண்மணியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைப் பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காகல் போலீஸார் அலட்சியமாகக் காரை இயக்கியதாக ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை கைது செய்தனர். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.