ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பு!

ரயில்வே துறை

ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற பின்னர் ஐந்து ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்கள், 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களின் பணி அனுபவத்தை மேலும் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது. சமீபத்தில், ரயில்வே துறை புதிய கால அட்டவணையை வெளியிட்டது.

இதுகுறித்து அனைத்து மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில், "ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்கள், முதல்கட்டமாக, ஓர் ஆண்டு வரை பணியாற்றலாம். அதன்பின், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்"  என்று கூறப்பட்டுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!