`விவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக்குவோம்!' - ஜெட்லி தகவல்

`நமது நாட்டில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்துவதில் மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது' என்று டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கருத்துரங்கில் உரையாற்றினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. 

ஜெட்லி

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், `விவசாயத் துறையை முன்னேற்றுவது குறித்து அரசுக்கு அதிக அக்கறை இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வருவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. விவசாய சமூகம், உலகம் முழுவதும் பெருமைக்குரியதாகவே போற்றப்படுகிறது. மேலும், நமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தின் வளர்ச்சியை வைத்தே இருக்கிறது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது. மிகவும் முன்னேறிய நாடுகள் விவசாயிகளுக்கு நேரடியான மானியங்களை வழங்குகிறது. அதேபோல, பயிர்களுக்குச் சேதாரம் ஏற்படும் நிலையில், காப்பீட்டுத் தொகை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிறது. அதேபோன்ற ஒன்றை இங்கும் அமல்படுத்த, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று உரையாற்றினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!