வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (17/12/2017)

கடைசி தொடர்பு:14:51 (17/12/2017)

`பா.ஜ.க ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை!' - ஜிக்னேஷ் மேவானி திட்டவட்டம்

நாளை குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜிக்னேஷ் மேவானி, `பா.ஜ.க இம்முறை ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ஜிக்னேஷ் மேவானி

குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தன. இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. 14-ம் தேதி தேர்தல் முடிந்தபின், பல ஊடக நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், குறைந்தபட்சம் 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பை வரவேற்றுள்ளது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளோ கருத்துக் கணிப்புகள் முற்றிலும் போலியானவை என்று நிராகரித்துள்ளன. இந்நிலையில், குஜராத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான ஜிக்னேஷ் மேவானி தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகள் குறித்து, `தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் மிகவும் போலியானவை. பா.ஜ.க இம்முறை கண்டிப்பாக தேர்தலில் தோல்வியடையும். அவர்கள் ஆட்சி அமைக்கமாட்டார்கள்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.