’அமைச்சர் பதவிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி!’ முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

அமைச்சர் பதவிக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதியை அவசியமாக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அமைச்சர் பதவியில் இருப்பவர் அரசில் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆவணங்களை ஆய்வுசெய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்திலும் அமைச்சர்கள் இருப்பதால், அந்தப் பதவிக்கு அடிப்படைக் கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், மத்திய, மாநில அரசுகளில் இதுபோன்ற முக்கியமான பதவியில் அமர்வதற்கான வயதையும் தற்போதுள்ள 25 என்பதிலிருந்து 35 அல்லது 40-ஆக உயர்த்த வேண்டும்’ என்றார்.

எம்.எல்.ஏ ஆவதற்கு அடிப்படைக் கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘எம்.எல்.ஏ-க்களுக்கு கல்வியறிவு அவசியம் என்று வாதிடுபவன் நானல்ல. அதேநேரம், கல்வியறிவு மட்டுமே நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துவிடும் என்றும் நான் கூறவில்லை. கல்வியறிவை விட குணநலன்கள் முக்கியமானவை. அதேபோல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்களை அமைச்சர்களாக நியமனம் செய்யக்கூடாது’ என்றார்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!