வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (18/12/2017)

கடைசி தொடர்பு:09:09 (18/12/2017)

குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 


கோப்புப்படம்

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையடுத்து, இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. 182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜனதா உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர், தொடர்ந்து 3 மாதங்கள் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். 68 உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.