வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (18/12/2017)

கடைசி தொடர்பு:11:08 (18/12/2017)

#LiveUpdates தேர்தல் முடிவுக்கு முன்னரே வெற்றி சின்னம் காட்டிய மோடி! #GujaratResults

ராஜ்கோட் மேற்கு தொகுதியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 21,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

vijay rupani
 

குஜராத் மற்றும் இமாசல் சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வரும் நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி வெற்றி சின்னம் காட்டிவிட்டு உள்ளே சென்றார். 

குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில், தற்போது  பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்துவருகிறது.

gujarat

குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில், தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து, 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.   

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க முன்னிலை வகித்தாலும், காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க-104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 76 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார். குஜராத் மேசானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை வகிக்கிறார்.

 

குஜராத் 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில், தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

modi

 

68 உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க