வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:00 (18/12/2017)

முதல் சோதனையில் கரையேறினாரா ராகுல்..?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள ராகுல் காந்திக்கு முதல் செய்தியாகக் குஜராத் தேர்தல் தோல்வி வந்து சேர்ந்துள்ளது. ஆனால், குஜராத் தேர்தல் பின்னடைவுதான் என்றாலும் அது ராகுலின் வெற்றியையும் காண்பிக்கிறது என்றே கூறுகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.

ராகுல்

குஜராத் பொதுத்தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றி இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பா.ஜ.க-தான் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் முதல் இரண்டு இடத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் ராகுல் காந்தி சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் குஜராத் தேர்தல் அமைந்துவிட்டது. குஜராத் தேர்தல் என்பதைவிட ராகுலுக்கான முதல் சோதனையாகத்தான் இத்தேர்தல் பார்க்கப்பட்டது.

வெற்றி பா.ஜ.க-வுக்கு உறுதி என்றாலும் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்டவராக மாறியுள்ளார் ராகுல் காந்தி. அவரது உழைப்பும் பிரசார நேர்த்தியும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் காங்கிரஸ் கட்சியின் சுவடுகள்தான் அழுத்தமாகப் பதிந்துள்ளதே ராகுலின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வகையில் முதல் சோதனையில் ராகுல் காந்திக்கு ’வெற்றி’ என்று கூற முடியாவிட்டாலும் தோல்வி இல்லை என்பதே தற்போதைய நிலை.