கைநிறைய சம்பளத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் பணி! | AIIMS Bhubaneswar requirement for nursing post

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (20/12/2017)

கடைசி தொடர்பு:10:11 (20/12/2017)

கைநிறைய சம்பளத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் பணி!

அகில இந்திய மருத்துவக்கழகத்தின் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவக்கழக மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில், நர்ஸிங் உட்பட ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நர்சிங்


இங்கு, சீனியர் நர்ஸிங் ஆபீஸர், ஸ்டாஃப் நர்ஸ் (கிரேடு 1), நர்ஸிங் ஆபீஸர், ஸ்டாஃப் நர்ஸ் (கிரேடு 2) பணி வாய்ப்புகள் இருக்கின்றன. நர்ஸிங் பிரிவில் வேலை வாய்ப்பைப் பெற, பி.எஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படித்து நர்ஸிங் கவுன்சிலில் பெயரைப் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 1,000 ரூபாய். பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணத்தில் விலக்கு வழங்கப்படும். ஏற்கெனவே பணி அனுபவம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்கிறார்கள்.

நர்ஸிங் கிரேடு 1 பணிக்கு வயது வரம்பு 35. நர்ஸிங் கிரேடு 2 பணிக்கு வயது வரம்பாக 30 என்று நிர்ணயித்துள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வயதுவரம்பில் விலக்கு உண்டு. டிசம்பர் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வழியாக (www.aiimsbhubaneswar.edu.in) விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.