ரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட கால்களை மீண்டும் பொருத்தி சாதனை!

யில் விபத்தில் சிக்கிய சிறுவனின் துண்டிக்கப்பட்ட கால்கள் மீண்டும் பொருத்தப்பட்டு நடக்கத் தொடங்கியிருக்கிறான்.

கால்கள் பொருத்தப்பட்ட பின்பு சிறுவன் சலியா

pic courtesy: mathrubhumi

கண்ணூர் அருகே பையனூர் எனும் இடத்தில் தாயுடன் ரயில் தண்டாவளத்தைக் கடக்க முயன்ற சலியா என்ற நான்கு வயது சிறுவனின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. இந்த விபத்தில் சலியாவின் தாயார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஏப்ரல் மாதத்தில் இந்த விபத்து நடந்தது. முதல்கட்ட சிகிச்சைக்குப் பின், மங்களூருவில் உள்ள ஏ.ஜே மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். 

ரயில் தண்டாவளத்தில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த சிறுவனின் கால்களும் குளிர்சாதன முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் தினேஷ் கடம் தலைமையில், சிறுவனுக்கு மீண்டும் கால்களைப் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது.

தற்போது, சிறுவனுக்கு கால்களில் உள்ள நரம்புகள் வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளன. மெதுவாக நடக்கத் தொடங்கியிருக்கிறான்.  இதனால், சலியாவின் தந்தை, உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் இத்தகைய அறுவை சிகிச்சை நடைபெறுவது இதுவே முதன்முறை. உலகளவில் 13வது அறுவை சிகிச்சை ஆகும்.

அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் கடம் கூறுகையில், ''விபத்தில் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை முறையாகப் பாதுகாத்து வைத்தால், மீண்டும் பொருத்த 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. சிறுவன் தனியாக நடக்கத் தொடங்கியதும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவான்'' என்றார்.

சமீபத்தில், இறந்துபோன ஒருவரின் இரு கரங்களும் அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட்டு புனே நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!