”உடனே தூக்கிலிடப்போவதில்லை”!- குல்பூஷண் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் பதில்

பாகிஸ்தான் சிறையில் உள்ள ”குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் போவதில்லை” என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷண் ஜாதவைக் கடந்த மார்ச் 3-ம் தேதி, பாகிஸ்தான் படைகள் கைதுசெய்தன. பலுசிஸ்தான் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்குத் தூக்குத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம், தூக்குத்தண்டனையை நிறுத்திவைத்துள்ளது. 

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, ஜாதவைச் சந்திக்க அவருடைய மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதை, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றப்போவதில்லை என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!