கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

உலகமே வியந்து போற்றிய கணித மேதை ராமானுஜரின் பிறந்தநாள் இன்று.

ராமானுஜம்

லட்சம், கோடி எண்களைக்கூட எளிதில் கூட்டிக்கழித்துவிடும் கணித மேதை, ஸ்ரீநிவாச ராமானுஜன். 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி, ஈரோடு சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதிக்கு வரமாய் கிடைத்தவர்தான் ராமானுஜம். குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டிலிருந்து கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்தனர் குடும்பத்தார். பள்ளிக்குச் செல்லாமல், கோயில் மண்டபங்களில் அமர்ந்து விடைதெரியா பல கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதையே தன் முழுநேர வழக்கமாக வைத்திருந்தான், சிறுவன் ராமனுஜன். தூக்கத்தில்கூட கணிதத்தை நேசிக்கக்கூடியவருக்கு எண்களே மூச்சாகின.

கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் படித்தார். 1909-ல் திருமணமானது. மனைவி ஜானகியின் அறிவுறுத்தலின் பேரில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ராமானுஜன். வேலைபார்த்துக்கொண்டே இவர் ஆற்றிய கணிதப் பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற ராமனுஜன், உதவித்தொகையின் மூலம் டிரினிட்டு கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார்.

33 வயதில் மரணத்தைத் தழுவியபோதும் அவருடைய புகழ் உலகச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இன்று ராமனுஜத்தின் பிறந்தநாள் தேசிய கணித தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!