பனாஸ் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! - 26 பேரின் உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் துபி என்னும் இடத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

bus accident
 

ராஜஸ்தானின் சவாய் மதோபூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோருடன் சென்ற பேருந்து, பனாஸ் ஆற்றின் மீதுள்ள பாலத்தை கடக்கும்போது தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் 26 பேரின் உடலை மீட்டனர். 10 பேரை காயங்களுடன் காப்பாற்றியுள்ளனர். ஆற்றில்  சிலர் அடித்துச் செல்லப்படிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!