பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு உத்தரபிரதேசத்தின் பரேலி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா 'குவான்டிகோ' என்னும் ஆங்கில தொடரில் நடிக்கத் தொடங்கிய பின்பு ஹாலிவுட்டிலும் முன்னணி நடிகையானார். இதையடுத்து, ஹாலிவுட்டிலும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் உருவாயினர். இந்தாண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் பஸ்நெட் இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரியங்கா.

இந்நிலையில், தற்போது  உத்தரபிரதேசத்தின் பரேலி பல்கலைக்கழகம் பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை நாளை வழங்கி கவுரவிக்க உள்ளது. யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ணத்தூதுவராக சிறப்பாகத் தொண்டாற்றி வருவதற்காக இப்பட்டம் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை நடைபெற உள்ள விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!