குஜராத்தில் வருகிற 26-ம் தேதி பதவியேற்கும் பா.ஜ.க தலைமையிலான அரசு | Modi led BJP to take charge at gujarat from tuesday

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (24/12/2017)

கடைசி தொடர்பு:12:25 (24/12/2017)

குஜராத்தில் வருகிற 26-ம் தேதி பதவியேற்கும் பா.ஜ.க தலைமையிலான அரசு

குஜராத் மாநிலத்தில் ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க தலைமையிலான வருகிற 26-ம் தேதி குஜராத்தில் பதவியேற்கிறது.

குஜராத்

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து, முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், குஜராத் முதல்வராக இருக்கும் விஜய் ரூபானியே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த முடிவை அறிவித்தார். அதன்படி, மீண்டும் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான புதிய மந்திரிசபை வரும் 26-ம் தேதி பதவியேற்கிறது. காந்திநகர் சச்சிவாலயா திடலில் காலை 11 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. முதல் மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close