வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (25/12/2017)

கடைசி தொடர்பு:09:44 (25/12/2017)

தாய் மற்றும் மனைவியை இன்று சந்திக்கும் குல்பூஷன் ஜாதவ்?!

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷன் ஜாதவ் இன்று அவர் தனது தாய் மற்றும் மனைவியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அவர், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக,  ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை நடைபெற்று வருவதால் அவரது மரண தண்டனையை ஐ.நா நிறுத்திவைத்துள்ளது.  

இதற்கிடையில் குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாய் அவரை காண வேண்டும் என்ற தொடர் முயற்சிக்கு இறுதியாக பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இஸ்லாமபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் இருவரும் குல்பூஷன் யாதவை இன்று சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இவர்கள் இருவரும் இன்று இஸ்லாமபாத் நகருக்குச் செல்கின்றனர்.