புதிதாக 21 அணு உலைகள் தொடங்கப்படும்..! அணுசக்தி அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் புதிதாக 21 அணு உலைகள் தொடங்கப்படும் என்று அணுசக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள அணு உலைகள் பற்றி அணுசக்தி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், `தற்போது நாடு முழுவதும் 22 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், புதிதாக 21 அணு உலைகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான வரைவுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதிகரித்துவரும் மின்சாரத் தேவைக்கு அணு உலைகள் நிச்சயம் அவசியம். நாட்டில் இயங்கும் எந்த அணு உலைகளையும் மூடும் எண்ணம் கிடையாது. உலகம் முழுவதும் 448 அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன' என்று அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!