வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (26/12/2017)

கடைசி தொடர்பு:12:28 (26/12/2017)

இரண்டாவது முறையாகக் குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்றார் விஜய் ரூபானி!

குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்றது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

விஜய் ரூபானி
 

குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து, முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், குஜராத் முதல்வராக இருக்கும் விஜய் ரூபானியே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் வெற்றிபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த முடிவை அறிவித்தார். 

விஜய் ரூபானி

இதைத் தொடர்ந்து இன்று குஜராத்தின் காந்தி நகரில் பிரமாண்டமாகப் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மூத்த அமைச்சர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாகப் பா.ஜ.க பதவியேற்பது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க