காபி கடையை மறக்காத மோடி - சிம்லாவில் நடந்த சுவாரஸ்யம்

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத் முதல்வராக நேற்று பதவியேற்றார் விஜய் ரூபானி. இமாசலப் பிரதேச மாநிலத்தில் புதிய அரசு இன்று பதவியேற்றது. முதல்வராக, ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

மோடி

PHOTO: ANI

பதவியேற்பு விழா முடிந்த பின்னர், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் தளத்துக்குச் செல்லும் வழியில் அந்த சுவாரஸ்யச் சம்பவம் நடந்தது. பாதி வழியில் இந்தியன் காபி ஹவுஸ் என்ற கடையில் வண்டியை நிறுத்தி, இறங்கி காபி குடித்தார். மோடியைக் காண சாலையில் பலர் இருந்தனர். அவர்கள் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்சிப் பணிக்காக இமாசலப் பிரதேசம் வந்தபோது இந்தக் கடையில்தான் அவர் காபி குடித்தாராம். அதை மறக்காமல் மோடி அதே கடையில் இறங்கி காபி குடித்திருக்கிறார். 

மோடி

PHOTO: ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!