வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (28/12/2017)

கடைசி தொடர்பு:08:06 (28/12/2017)

பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி!

த்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர், அவரிடம் பக்திப் பாடம் படிக்க வந்த இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால், அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து ஆடையை உருவி தர்ம அடி கொடுத்தனர்.

போலி சாமியார்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் பாபா பாசுதேவ் சாஸ்திரி. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு  பக்தி வகுப்பு எடுப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தவறான முறையில் போட்டோக்களை எடுத்து, அதை வைத்து மிரட்டி சில மாதங்களாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அந்தப் பகுதி மக்கள் சிலர் சாமியரைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு இளம்பெண்கள் அவரது  பேன்டை உருவி லத்தியால் அடித்துத் துவைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 

சாமியாரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற ஆடை அணிந்த சாமியாரின் தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொள்கிறார். பின்னர் அந்தப் பெண்கள் தாக்கும்போது, சாமியார் அந்த லத்தியைப் பிடித்து தடுக்க முயல, அவரை விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க