மகனின் காதலால் தாய்க்கு நிகழ்ந்த கொடூரம்! | Women Harrased by a gang for his son's love

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (30/12/2017)

கடைசி தொடர்பு:19:30 (30/12/2017)

மகனின் காதலால் தாய்க்கு நிகழ்ந்த கொடூரம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் நோஜல் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணைக் காதலித்துவந்தார். இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த நவம்பர் 20-ம் தேதி இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் வீடு திரும்பவில்லை.

கேங்அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டது பெண் வீட்டாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் துடித்தனர். டிசம்பர் 19-ம் தேதி அந்த இளைஞரின் வீட்டுக்கு வந்த பெண்ணின் உறவினர்கள், இளைஞரின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் உறவினர்களைக் கடத்திச் சென்றனர். அவர்களைத் தங்கள் வீட்டில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். அதோடு நில்லாமல் அந்த இளைஞரின் தாயை பலபேர் முன்னிலையில் கொடூரமாகக் கூட்டு மானபங்கம் செய்துள்ளனர். சித்ரவதை தொடர்ந்த நிலையில், கடந்த 25-ம் தேதி போலீஸார் நடத்திய சோதனையில் அவர்கள் மீட்கப்பட்டனர். 

போலீஸாரிடம் இளைஞரின் குடும்பத்தினர் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளனர். இது போலீஸாருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் பால் ஷர்மா தெரிவித்தார்.