வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (31/12/2017)

கடைசி தொடர்பு:06:30 (31/12/2017)

ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு..! பெண் பலி

ஹரியானா மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியான மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா. ராணுவ வீரரான அவரது கணவர், கார்கில் போரில் உயிரிழந்தார். அவருக்கு பவன்குமார் என்ற மகன் உள்ளார். சகுந்தலாவுக்கு உடல்நிலை சரியில்லாதநிலையில், அவரது மகன் அவரை சோனிபட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சகுந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்க ஆதார் அட்டை கேட்டுள்ளனர். பவன்குமார், மொபைலில் இருந்த ஆதார் அட்டையில் படத்தை காட்டியுள்ளார்.

அதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்காமல், சகுந்தலாவுக்கு சிகிச்சை அளிக்கமறுத்துள்ளது. அவரை, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்தவிவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பவன்குமாரின் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.