வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/01/2018)

கடைசி தொடர்பு:17:30 (01/01/2018)

புத்தாண்டின் முதல் நாளன்று சந்திரபாபு நாயுடுவின் ஸ்பெஷல் அறிவிப்பு!

2018-ம் ஆண்டின் முதல் நாளான இன்று, உலகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, `இந்த  வருடத்தை, தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான வருடமாக அறிவிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

விஜயவாடாவில் நடந்த 29-வது புத்தகக் காட்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, `நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மொழியின் வாயிலாகத்தான் பாதுகாக்க முடியும். தெலுங்கு மொழியின் சீரழிவை நாம் தடுக்க வேண்டும். இந்த  வருடத்தை, தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான வருடமாக நான் அறிவிக்கிறேன்' என்று கூறியுள்ளார். இது, அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, வெங்கைய நாயுடுவின் ஸ்வரண பாரத் ட்ரஸ்ட், புத்தகம் மற்றும் இலக்கியத்துக்கு பங்காற்றுவதைப் பாராட்டிப் பேசினார்.