வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (01/01/2018)

கடைசி தொடர்பு:07:33 (02/01/2018)

`உள்ளூர் மொழியில் அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும்!' - பிரதமர் மோடி கருத்து

பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸின் 125-வது பிறந்தநாளையொட்டி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி

அப்போது, `அறிவியலை இளைஞர்கள் மத்தியில் பரவலாக்கவும் அதைப் புரியவைக்கவும் உள்ளூர் மொழியில் அதை எடுத்துச்செல்ல வேண்டும். மிகப் பெரிய அளவில் அதைச் செய்ய வேண்டும். அறிவியலைப் பொறுத்தவரை, மொழி என்பது ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது. மாறாக, அது அறிவியலை நோக்கி இளைஞர்களை இழுக்கும் தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். எனவே, உள்ளூர் மொழியில் அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும். விஞ்ஞானிகளிடம் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் கண்டுபிடிப்புகள்மூலம் ஏழைகளின் வாழ்க்கை ஏதேனும் ஒரு வகையில் சுலபமடைகிறதா, நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டம் ஏதேனும் ஒரு வகையில் குறைக்கப்படுகிறதா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அதைப் பொறுத்துத்தான் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். நாடு எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மாற்றங்களை மனதிற்கொண்டு, விஞ்ஞானிகள் அவர்களின் ஆய்வுக் களத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.