பாகிஸ்தான் சிறைகளில் வாடும்  457 இந்தியர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த 457 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான்


இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்டுள்ள 30 ஆண்டுகால ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஆண்டிறுதியில் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை, அணு நிலைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். அதன்படி இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகள், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கைதிகள் விவரத்தை இரு நாடுகளும் பகிர்ந்துகொண்டன.

இந்தியச்சிறைகளில், பாகிஸ்தானைச் சேர்ந்த 94 மீனவர்கள் உள்பட 344 பேர் உள்ளனர். மேலும், 4 மீனவர்கள் உள்பட 54 பாகிஸ்தானியர்கள் தண்டனைக் காலம் முடிந்து விரைவில் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் சிறைகளில், 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 399 பேர் மீனவர்கள். அவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களில் 146 மீனவர்களை ஜனவரி 8-ம் தேதி விடுதலை செய்வதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மற்றவர்களையும் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!