ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி..! | Aam Admy annouced his party Rajya Sabha candidate

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (03/01/2018)

கடைசி தொடர்பு:18:15 (03/01/2018)

ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி..!

டெல்லியில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

டெல்லிக்கான 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதால் மூன்று மாநிலங்களைவை உறுப்பினர்களையும் போட்டியின்றி பெரும் வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், அந்தக் கட்சி சார்பில் ரகுராம் ராஜன் போட்டியிடுவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆகவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி இன்று அறிவித்தது. சஞ்சய் சிங், நாராயண் தாஸ் குப்தா, சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ம் தேதி அவர்கள் வேட்புமனுத்தாக்கல்செய்வார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 


[X] Close

[X] Close