சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்..! சாமியார் விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் டெல்லி சாமியார் பாபா விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

டெல்லியில் பாபா விரேந்தர் தீக்சித்துக்குச் சொந்தமான 'அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா' இயங்கி வருகிறது. இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் வந்தது. அதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைள் நலக் குழுவானது போலீஸாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறைப் போன்ற சூழலில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

அவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களில் 41 சிறுமிகளைக் காவல்துறையினர் மீட்டனர். மேலும் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சாமியார் பாபா விரேந்தர் தீக்சித் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆஷ்ரமத்தில் சோதனை செய்தபோது, தகராறில் ஈடுபட்ட ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!