வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (04/01/2018)

கடைசி தொடர்பு:15:01 (04/01/2018)

வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் இடைக்கால மனு!

பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், வியாபார நோக்கில் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம். இம்மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வெளிநாடு பயணம் செல்ல அனுமதி வேண்டுமென்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 8-ம் தேதி இந்த மனு நீதிமன்றத்தால் விசாரணைக்கு வருகிறது.