வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (04/01/2018)

கடைசி தொடர்பு:14:19 (04/01/2018)

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவும் அது குறித்த பெண்களின் கருத்துகளும்!

இஸ்லாமிய திருமண முறையில் இணைந்த தம்பதி விவகாரத்து செய்ய நினைத்தால் தலாக் என்று மூன்று முறை சொன்னால் போதுமானது. ஆனால் கொரியரில், போனில், கோபத்தில் முத்தலாக் சொல்லப்படுவதால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இஸ்லாமிய பெண்கள் போர்க்கொடி தூக்கி வந்தார்கள். அதன் தாக்கமாக பெருத்த சர்ச்சைகளுக்குப் பிறகு 2017ம் வருடம் டிசம்பர் 28ம் தேதி அன்று நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட மசோதாவில்...

தலாக்

'முத்தலாக் சொன்னால், மூன்று ஆண்டுகள் கணவருக்கு சிறை தண்டனை. ஜாமீன் கிடையாது; விசாரணை கிடையாது' என்ற 'முத்தலாக்' மீதான மத்திய அரசின் மசோதா, பரபரப்பையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது, இஸ்லாமிய பெண்களை இந்தப் பிரச்னையிலிருந்து காப்பாற்றுமா, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண்களிடம் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இதுகுறித்து மூன்று பிரபலங்களிடம் பேசினோம்... மற்றும் வழக்கறிஞர் அருள்மொழி மற்றும் பி.ஜே.பி.யின் மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன். 

கவிஞர் சல்மா:

“முஸ்லிம் மார்க்கத்திலே இல்லாத... எகிப்து, சவுதி, ஜோர்டான் உள்ளிட்ட 22 இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்ட வழக்கம்தான் முத்தலாக் குறித்து சல்மாஇந்த முத்தலாக். இது, முழுக்க முழுக்க ஆணாதிக்கம் சார்ந்த மூடநம்பிக்கை. உலகில் இருக்கும் ஒவ்வொரு மூடநம்பிக்கைகளின் பின்னணியிலும் ஆணாதிக்கம் இருப்பது தெரிந்த விஷயமே. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற படி ஏறினால், உடனே கணவனைப் பிடித்து ஜெயிலில் போடு என்று சட்டம் சொல்லவில்லையே. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துச் சேர்த்துவைக்கவே சட்டம் முயற்சி எடுக்கிறது. அதைத்தானே முஸ்லிம் பெண்களுக்கும் செய்திருக்க வேண்டும். இந்த முத்தலாக் பிரச்னையில் பாதிக்கப்படுவது பெண்களே. அப்படியென்றால், முஸ்லிம் பெண்கள் அமைப்பையும் இதற்காகப் போராடியப் பெண்கள் அமைப்புகளையும் கலந்து ஆலோசித்தல்லவா அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மொத்தத்தில், ஒரு சிவில் கேஸை கிரிமினல் கேஸாக மாற்றிவிட்டது இந்த அரசு'' என்று கட்டமாக சொல்கிறார். பெண்களுக்கான சட்டங்களை ஆண்கள் விவாதித்தால், அதற்கு எப்படிச் சரியான தீர்வு கிடைக்கும் என்பது கவிஞர் சல்மாவின் இன்னொரு ஆதங்கம்.

வழக்கறிஞர் அருள்மொழி: 

தலாக்

“முஸ்லிம் மதத் தலைவர்களும், ஜமாத்தைச் சேர்ந்தவர்களும் முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாயளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்களே ஒழிய, இந்த முத்தலாக் கொடுமையைக் கண்டும் காணாமல்தான் இருந்தார்கள். அதன் விளைவுதான், பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அதனால், 'முத்தலாக்' சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டியதே. இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால், முஸ்லிம் பெண்களின் உரிமை தொடர்பான இந்த விஷயத்தில், வழக்குத் தொடுத்த பெண்களின் சார்பில் வழக்கு நடத்திய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிடமே கலந்து ஆலோசிக்கவில்லை. அதன் விளைவுதான், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில், மனமொத்து முத்தலாக் தந்தாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு, ஏழாவது பிரிவில் அப்படி முத்தலாக் தந்தால் ஜீவனாம்சம் தர வேண்டும் எனச் சொல்லியிருப்பது. கணவனுக்குச் சிறை தண்டனை தருவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த வகையிலும் உதவாது. பெண்கள், கணவனை எதிர்த்துப் போராடியதே அவர்களுடன் வாழ்வதற்குத்தான். அந்த அடிப்படையையே இந்தச் சட்டம் புரிந்துகொள்ளவில்லை. கணவனைச் சிறையில் தள்ளிவிட்டால், அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் யார் பொறுப்பு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லாததுதான் இந்தச் சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு.'' முத்தலாக் குறித்து வானதி

வானதி ஶ்ரீனிவாசன் (பி.ஜே.பி. மாநில பொது செயலாளர்):

''பாதிக்கப்பட்ட பெண்களே தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகும்போது, அவர்களுக்கு நல்ல நியாயத்தை வழங்குவதுதான் அரசின் கடமை. வெகு காலமாக பெண்கள் பாதிக்கப்பட்டு வந்த விஷயத்தில், அரசு ஒரு முடிவை எடுக்கும்போது, அதை மதத்தின் பெயரால் தடுக்க நினைப்பது சரியில்லை'' 


டிரெண்டிங் @ விகடன்